Header Ads



அல்லாஹ் விதித்த விதிமுறை


அமெரிக்கா மாத்திரம் ஆதிக்க சக்தியாக இருந்தால் உலகம் சின்னாபின்மாகியிருக்கும்.


ரஷ்யா மாத்திரம் ஆதிக்கசக்தியாக இருந்தாலும் உலகம் சின்னாபின்மாகியிருக்கும்.

அதைவிட ஆச்சரியம் அவ்விரண்டும் கைகோர்க்க நினைத்த போது அந்த அல்லாஹ் சீனா என்ற அரக்கனை அரங்கத்தில் ஏற்றினான்.

சிலரை சிலரால் தட்டி அடக்கி வைப்பது, அல்லாஹ் ஏற்படுத்தி வைத்த பிரபஞ்ச நியதி.

நீ உயர்ந்தவன் என்று நீ நினைத்தால், உன்னை குட்டிவைக்க இன்னொருவன் கலத்தில் இறங்குவான்.

நாட்டிலும், வீட்டிலும், ஊரிலும், உலகிலும், காட்டிலும், கடலிலும் இதுதான் படைத்தவன் விதித்த விதிமுறை. மாறாத மரபு வழி.

இல்லாவிட்டால், உலகம் என்றோ சின்னாபின்மாகியிருக்கும்.

இல்லாவிட்டால் அல்லாஹ் பெரியவன் என்பதற்கு என்ன அர்த்தம்,

பார்க்க; அல்குர்ஆன் / அல்பகரா - 251

✍ கலாநிதி முஸ்தபா மஹ்மூத்
✍ தமிழாக்கம் / Imran Farook

No comments

Powered by Blogger.