புத்தர் சிலையை வைத்த, இராணுவ வீரர் கூறும் காரணம்
- எம்.றொசாந்த் -
புத்தபெருமான் கனவில் வந்து, தன்னை வழிபடுமாறு கூறியமையால் , அவ்விடத்தில் வழிபடுவதற்காக புத்த பெருமானின் சிலையை வைத்தேன் என நிலாவரை கிணற்றடியில் புத்த பெருமானை வைத்த இராணுவ சிப்பாய் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றடியில் உள்ள அரச மரம் ஒன்றின் கீழ் வெள்ளிக்கிழமை (24) இரவு புத்தரின் சிலை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.
அது தொடர்பில் சனிக்கிழமை (25) ஊரவர்கள் அறிந்து அவ்விடத்தில் கூடியதுடன் , வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கும் அறிவித்தனர்.
அதனை அடுத்து தவிசாளர் அவ்விடத்திற்கு சென்ற நிலையில் , அங்கு இராணுவத்தினர் மற்றும் அச்சுவேலி பொலிஸார் ஆகியோரும் சென்று இருந்தனர்.
பிரதேச சபை தலையீட்டினை அடுத்து, புத்தர் சிலையை இராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து அகற்றினர்.
இந்நிலையில் அவ்விடத்தில் புத்தர் சிலை வைத்தார் என கூறப்பட்ட இராணுவ சிப்பாயியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது , புத்த பெருமான் கனவில் வந்து தன்னை வழிபடுமாறு கூறியமையால் , இவ்விடத்தில் புத்தர் சிலையை வைத்து வழிபட்டேன் என கூறியுள்ளார்.
Post a Comment