அடுத்த மாதம் அரச ஊழியர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியமும் வழங்குவதில் சிக்கல்
மார்ச் மாத அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகள் உள்ளிட்ட நாளாந்த தொடர் செலவுகளுக்காக 23 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்துக்கு எதிர்பார்க்கப்படும் வருமானம் 173 பில்லியன் ரூபாவாக இருந்தாலும், சம்பளம் மற்றும் தொடர் செலவுகளுக்காக நூற்று 196 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதன்படி 23 பில்லியன் ரூபா பற்றாக்குறை நிலவுவதாக நிதி அமைச்சின் செயலாளர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் இலங்கை செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டி 508 பில்லியன் ரூபா எனவும், அதன்படி மார்ச் மாதத்தில் பற்றாக்குறை 554 பில்லியன் ரூபா எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நாட்டுக்கு நல்லதொரு ஆட்சியைக் கொண்டுவரவும் தான் பொதுமககள் இந்தக் கழுதையை தெரிநதோ தெரியாமலோ பதவியில் அமர்த்தினர்.இனி, இந்தக் கள்ளக்கூட்டம் திறைசேரி, மத்தியவங்கி உற்பட அத்தனை பொதுச் சொத்துக்களையும் களவாடி உலகம் முழுவதும் சென்று பதுக்கிவைத்துவிட்டு நாட்டின் வருமானம் செலவுக்குப் போதாது என்று கூறி பொதுமக்களை மறைமுகமாகக் குற்றம் சாட்டமுயற்சி செய்கின்றான். பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதாகக் கூறிக் கொண்டு பதவியில் அமர்ந்து கொணடு பிரச்சினைகளை பொதுமக்களிடம் பறைசாற்ற உம்மை நாம் நியமிக்கவில்லை. அதுபிரச்சினைகளைத் தீர்க்க உம்மிடம் எந்த வழியும் இல்லை என்பதைக் காட்டுகின்றது. எனவே மக்கள் அமைதியாக இருக்கும் போது இரவில் ஊழையிட்டுத் திரியும் நரிபோல் வீணாப் போன வேலை பார்க்காமல் பதவியை விட்டுவிட்டுத் தொலைந்து போ. அந்தப்பதவியை வகிக்க இந்த நாட்டில் சிறந்த அனுபவமிக்க மக்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அந்தப் பிரச்சினைகளைப் பார்த்துக் கொள்வார்கள்.
ReplyDelete