தேசிய மக்கள் சக்தி, சுத்தமானது அல்ல - அமைச்சர் பிரசன்ன
மக்களைக் கொன்று அரச சொத்துக்களை அழித்த ஜனதா விமுக்தி பெரமுன தேர்தலில் போட்டியிட முடியுமானால், அகிம்ஷை அரசியல் கட்சியான தமது கட்சிக்கு போட்டியிட நூறு மடங்கு உரிமை உண்டு என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி மிக சுத்தமான கட்சி என சிலர் நம்பினாலும் அது உண்மையல்ல எனத் தெரிவித்த அமைச்சர், ஜே.வி.பி.யுடன் தொடர்புடையவர்களே மே 9 ஆம் திகதி சம்பவத்தை முன்னெடுத்தனர் எனவும் தெரிவித்தார்.
குருநாகல் மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“இங்கு வந்த பிறகு எல்லோரும் அமைச்சர் தேர்தல் நடக்குமா இல்லையான்னு கேட்டார்கள். அதற்கு நானோ, பொதுச்செயலாளரோ பதில் சொல்ல முடியாது. காரணம் நீதிமன்றம் சென்றுள்ளது. எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்” என்றும் அமைச்சர் கூறினார்.
Post a Comment