எமனின் குடிநீர் பற்றாக்குறையை இல்லாமலாக்க, களமிறங்கியுள்ள ஸவுதி அரேபியா
- Ismail muhaideen Ph.D.-
சென்ற பல ஆண்டுகளாக ஹுஸி கிளர்ச்சிக் குழுவினரால் அழிக்கப்பட்டு வரும் எமனின் மீள் கட்டுமானம் ஸவுதி அரேபியாவின் தலைமையில் மத்தியகிழக்கின் சில நாடுகளின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் தொடர்ச்சியில் எமனின் குடி நீர் பிரச்சினையை இல்லாமலாக்குவதற்கான 12 திட்டங்களை சவுதி அரேபியா முன்னெடுத்துள்ளது.
சென்ற 08.02.2023அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் ஹழர மவ்த், அப்யன், லஹ்ஜ் ஆகிய எமனின் மூன்று பிரதாண பிரதேசங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. இதன் இயக்கம் தடைப்படாமல் செல்லவும் பயனாளிகளுக்கு நீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் முழுமையாக சூரிய சக்தியில் இருந்து இயங்கும் வகையில் ராட்சத சூரிய வலு மின்பிறப்பாக்கிகள் இதற்காக பொருத்தப்பட்டுள்ளன. மொத்தமாக இத்திட்டத்திலிருந்து 58 ஆயிரம் குடும்பங்கள் பயனடையவுள்ளன.
சென்ற எட்டாம் திகதி நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிராந்திய அமைப்புக்களின் தலைவர்கள் எமனின் மீள் கட்டமைப்பு தொடர்ச்சியான அபிவிருத்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் பேசிய குத்ன் நகரசபையின் தலைவர் அப்துல்லதீப் முஹம்மத் அந்நகீப் தொடர்ச்சியாக எமன் மக்களின் துயர் துடைப்பதற்காகவும் எமனின் முன்னேற்றத்திற்காக சவுதி அரேபியா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளைப் பாராட்டியதோடு குறிப்பாக எமனை தங்களின் ஒரு பகுதியாக மத்திய கிழக்கு நாடுகள் கட்டுயெழுப்புவதற்காகச் செய்யும் ஒத்துழைப்புக்கள் மற்றும் எமனின் அபிவிருத்து மீள் கட்டமைப்பு என்பவற்றுக்காக ஸவுதி அரேபியாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களுக்காக நன்றி தெரிவித்தார். மேலும் எமனின் உட்கட்டுமானப்பணிகள், சூழல், பௌதீக வசதிகளை உருவாக்கி இம்மக்களின் துயர் துடைப்பதற்காக உழைக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
Post a Comment