மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என ஏகமனதாக தீர்மானம்
அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட இடைக்கால மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நேற்று (31) இடம்பெற்ற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான மின்சார கட்டண திருத்தத்திற்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment