அநுரகுமாரவுக்கு எதிராக சஜித்தின் சகோதரி நடவடிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி ஜயக்கொடி, தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஜயக்கொடியுடன் இடம்பெற்ற நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துலாஞ்சலி ஜயக்கொடியின் சட்டத்தரணி விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கருத்தைக் கையாளும் நோக்கில், மேற்படி சம்பவம் தொடர்பில் சமூக ஊடக தளங்களில் தவறான தகவல்களையும், அவதூறான கருத்துகளையும் பரப்பி வருவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், அவதூறான அறிக்கைகளுக்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க துலாஞ்சலி ஜெயக்கொடி உத்தேசித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களை வழிகெடுக்கும் சஜித்தின் மற்றொரு நாடகம்தான் இது. இந்த நாடகங்களுக்கு கண்டிப்பாக முடிவு கட்டவேண்டும். இவ்வளவுகாலமும் பொதுமக்களை ஏமாற்றி பதவிக்கு வந்து நல்லாட்சி, தர்மிஷ்ட ,ஜனசவிய, சமுர்த்தி என பல பெயர்களை வைத்துக் கொண்டு பொதுமக்களின் பெயரால் அவர்களின் சொத்துக்களையும் பொதுச் சொத்துக்களையும் சூறையாடியதும். கொள்ளையடித்ததும் தான் நாடு இந்த பஞ்சத்துக்குத் தள்ளப்படுவதற்கான காரணம் என்பதை தற்போது மக்கள் நன்றாக உணர்த்துள்ளனர். ஆனால் அதற்கு பதிலீடு என்ன என்பதைத் தெரியாமல் தடுமாறுகின்றனர். தற்போது பொதுமக்கள் செய்ய வேண்டியது எல்லா ஊர்களிலும் கிராமங்கள்,நகரங்கள், மாகாண மாவட்ட மட்டத்தில் சுயாதீனகட்சிகளை பொதுமக்கள் உருவாக்க வேண்டும். நாட்டின் அத்தனை தேர்தல் தொகுதிகளிலும் சுயாதீன கட்சிகளை நியமித்து அவர்கள் நீதி, நியாயம், சட்டம், ஒழுங்கு, மக்களுக்கும் நாட்டுக்கும் முதலுரிமை கொடுக்கும் அமைப்பை உருவாக்கி அவர்கள் நிச்சியம் ஆட்சிக்கு வரமுடியும். ஆட்சியைக் கைப்பற்றினால் அவர்களின் நீதியான கொள்கையை அறிமுகப்படுத்தி ஆட்சியைத் தொடங்கலாம். அதனை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை அரகலய சார்ந்த மக்கள் ஒன்றுகூடி தீர்மானிக்க வேண்டும். அங்கு எந்தக் காரணம் கொண்டும் கட்சி அரசியல் இருக்கமாட்டாது. அப்போது பொதுமக்களின் ஆதரவு படிப்படியாக அதிகரிக்கும். அது தவிர இலங்கைக்கு மற்றொரு தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை.
ReplyDelete