துருக்கிக்காக களத்தில் குதித்தார் ரொனால்டோ
துருக்கி நிலநடுக்கத்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கையொப்பமிடப்பட்ட ஜெர்சியை ஏலத்திற்கு வழங்கியுள்ளார் என துருக்கி கால்பந்து வீரர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
துருக்கி கால்பந்து வீரர் மெரிஹ் டெமிரல் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- ரொனால்டோவுடன் பேசினேன், துருக்கியில் நடந்த சம்பவங்கள் மிகுந்த வருத்தமளிப்பதாக சொன்னதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கையெழுத்திட்ட ஜெர்சியை ஏலத்தில் வழங்குவதாக அறிவித்தார். அதன் மூலம் கிடைக்கும் பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
Post a Comment