Header Ads



பணத்தைச் செலவிட்டு உருவாக்கப்படும் சமூக ஊடக, போலி அலைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம்


தேர்தல் மேடைகளில் ஏறி நின்று மக்கள் முன்னால் பொய்களைப் பேசி, மக்கள் ஆர்வ கதைகளைக் கூறி மக்களை ஏமாற்றும் காலத்திற்கு இனியேனும் முற்றுப்புள்ளி வைக்குமாறும்,2019 ஆம் ஆண்டைப் போன்று 2023 ஆம் ஆண்டிலும் பல்வேறு கட்சிகள் வந்து கூறும் மக்கள் ஆர்வ பேச்சுக்களையும் சமூக வலைதளங்கள் மூலமும் பணத்தைச் செலவிட்டு உருவாக்கப்படும் பல்வேறு சமூக ஊடக போலி அலைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


சஜித் பிரேமதாஸ பேருந்து பகிர்ந்தளிப்பவர் என குற்றம் சுமத்துபவர்களுக்கு, பிரயோசனம்  இல்லாமல் எதுவும் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதையே அவர்களுக்கு கூறவேண்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பாடசாலைக்களுக்குப் பேருந்துகளை வழங்குவது மக்களிடமிருந்து நற் பெயரைப் பெறுவதற்காக அல்லவெனவும், இலவசக் கல்வி என்ற எண்ணக்கருவை வலுப்படுத்துவதற்காகவே இவ்வாறு வழங்கப்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இத்துடன் நிற்காமல் தமக்கு அதிகாரம் கிடைத்ததும் இலங்கையில் முன்பள்ளி முதலே கல்வி முறையை மாற்றி புதிய தொழில்நுட்பத்துடன் புதிய கல்வி முறையை இலங்கையில் அறிமுகப்படுத்துவதாகவும்,உலகிற்கு ஏற்ற  விற்பன்னர்கள் அறிவுஜீவிகளை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


எஹலியகொட பிரதேசத்தில்  இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.