தனது சொந்த கட்சியும் தேர்தலில் போட்டியிட்டபோதும், தேர்தலே கிடையாது என ஜனாதிபதி கூறியது எவ்வாறு..?
வரலாற்றின் சர்வாதிகாரிகளான ஹிட்லரும் முசோலினியும் தேர்தல்களையும் வாக்குகளையும் மறுத்தனர் எனவும், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சர்வாதிகாரப் பயணத்தை மேற்கொள்கிறதா என தான் கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தனது சொந்த கட்சியும் தேர்தலில் போட்டியிட்ட போதும் தேர்தலே கிடையாது என ஜனாதிபதி கூறியது எவ்வாறு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் நேற்று(24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்கட்சி தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment