Header Ads



தோல்விக்கு பயந்த கோழை, நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளுவார் - மல்கம் ரஞ்சித் சாடல்


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படு வதற்கான காரணம் அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் பொதுமக்களின் அதிருப்தியாக இருந்தால், தேர்தலை எதிர்கொண்டு அதன் முடிவுகளுக்கு ஏற்ப மாற வேண்டும் என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார். 


பேராயர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோ மேற்குறிப்பிட்ட கர்தினாலின் விசேட அறிவிப்பை வெளியிட்டார்.


தம்மை தோல்விக்கு பயந்த கோழையாக வரலாற்றில் இடம் பெறுவதை தவிர்க்கும் புத்திசாலித்தனம் நமது நாட்டின் தலைவர்களுக்கு இருப்பதாக தான் எண்ணுவதாகவும் பேராயர் விசேட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.


தேர்தல் ஒத்திவைக்கப்படுவது இறுதியில் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும் என்றும் கர்தினால் அறிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.