தோற்கடிக்கப்பட்டார் கபீர்
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் இன்று (24) இடம்பெற்ற போதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.
இதன்போது, லசந்த அழகியவண்ணவின் பெயரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர முன்மொழிந்ததுடன், இராஜாங்க அமைச்சர் (கலாநிதி) சுரேன் ராகவன் வழிமொழிந்தார்.
அத்துடன், கோபா குழுவின் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீமின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் லசந்த அழகியவண்ணவுக்கு 14 வாக்குகளும், கபீர் ஹஷீமுக்கு 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய புதிய தலைவர் தெரிவுசெய்யப்பட்டார்.
2004 முதல் பல குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி தனக்கு பரந்த அனுபவம் உள்ளதாகவும், இந்தக் குழுவில் கட்சி பேதமின்றி சுயாதீனமாக நாட்டுக்காக மேற்கொள்ளவேண்டிய கடமைகளை நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் அதற்காக குழு உறுப்பினரகள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் புதிய தலைவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு பாராளுமன்ற வரலாற்றில் பழைமையான குழுவாக 2023 ஒக்டோபர் அளவில் 100 வருடங்களை பூர்த்தி செய்வதாக தலைவர் குறிப்பிட்டார்.
நாட்டின் நிதிக் கட்டுப்பாடு காணப்படும் பாராளுமன்றத்தினால் வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றியதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றம் சார்பில் கண்காணிப்பை மேற்கொள்வது அரசாங்க கணக்குகள் பற்றிய குழு என்பதால் பாராளுமன்ற சபைக்கு காணப்படும் பொறுப்புக்களுக்கு சமமான பொறுப்புக்கள் இந்தக் குழுவுக்கும் காணப்படுவதாக அழகியவண்ண மேலும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, பிரசன்ன ரணவீர, காதர் மஸ்தான், (கலாநிதி) சுரேன் ராகவன், டயனா கமகே, சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திசாநாயக்க, வஜிர அபேவர்தன, ஏ.எல்.எம். அதாஉல்லா, கபீர் ஹஷீம், மனோ கணேசன், (கலாநிதி) சரத் வீரசேகர, நிரோஷன் பெரேரா, ஜே.சி. அளவதுவள, வடிவேல் சுரேஷ், அசோக் அபேசிங்க, ஜயந்த கெடகொட, ஹெக்டர் அப்புஹாமி, (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, இசுறு தொடங்கொட, சஹன் பிரதீப் விதான, டி. வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
Post a Comment