Header Ads



கோட்டாபயவின் வீட்டுக்கு சென்று விசாரணை


 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


ஜனாதிபதி மாளிகையிலிருந்து போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட பணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.


நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடாத்தியுள்ளனர்.


குறித்த பணம் தொடர்பில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


மேலும் போராட்டக்காரர்களினால் மீட்கப்பட்ட பணம் கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


 

No comments

Powered by Blogger.