ஷஹீன் ஷா அப்ரிடி வேதனை
ஷஹீன் ஷா அப்ரிடி பாகிஸ்தான் முன்னாள் அதிரடித் துடுப்பாட்ட வீரர் ஷஹீட் அப்ரிடியின் மகளை கடந்த சனிக்கிழமை (04) திருமணம் செய்தார். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் முன்னர் அந்தப் படங்கள் சமூக ஊடகங்களில் கசியவிடப்பட்டிருந்தன.
திருமண நிகழ்வில் பங்கேற்பவர்கள் தமது தொலைபேசிகளை அணைக்கும்படி கோரப்பட்டிருந்தபோதும் அது நிகழவில்லை என்று கூறப்படுகிறது.
“எமது தனிப்பட்ட வாழ்வு பாதிக்கப்படும் என்று தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டபோதும் துரதிஷ்டவசமாக மக்கள் எந்த குற்ற உணர்வு இன்றி (புகைப்படங்களை) பகிர்கின்றனர். எமக்கு ஒத்துழைப்பு தரும்படியும் எமது வாழ்வின் சிறந்த நாளை சீர்குலைக்க வேண்டாம் என்றும் அனைவரிடமும் நான் மீண்டும் ஒரு முறை தயவுடக் கேட்டுக்கொள்கிறேன்” என்று ஷஹீன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கராச்சியில் இடம்பெற்ற இந்தத் திருமண வைபவத்தில் ஷதாப் கான், பாபர் அஸாம், பக்கர் சமான் மற்றும் சப்ராஸ் அஹமட் உட்பட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இருவரும் திருமணம் புரிந்ததை ஷஹீனின் மாமனாரான ஷஹீட் அப்ரிடி தனது ட்விட்டரில் உறுமி செய்தார். Thina
Post a Comment