ஜனாதிபதி, பிரதமர் பதவியில் எவ்வித மாற்றங்களும் ஏற்பட மாட்டாது
எந்த வகையிலும் தேர்தல் ஒன்று நடைபெறும் வரையில் ஜனாதிபதி பதவியிலோ அல்லது பிரதமர் பதவியிலோ எந்த எவ்வித மாற்றங்களும் ஏற்பட மாட்டாது என்று தான் பொறுப்புடன் கூறுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலையில், அதனை திசை திருப்புவதற்கு இவ்வாறான விடயங்களை கூறுவது நியாயமானது அல்ல என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஆம் நிச்சியம் அதில் எந்த மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பு இல்லை. பாராளுமன்றத்தில் உள்ள 134 கொள்ளையர்களும் மஹிந்த குடும்பமும் சேர்ந்து நியமித்த இருவரும் எந்த காரணங்கள் நிமித்தமும் மாற்றப்படமாட்டார்கள். அது தான் உண்மை.
ReplyDelete