துருக்கியில், இலங்கையரின் மனிதாபிமானம் (படங்கள்)
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அடைக்கலம் அளிக்க முன்வந்த இலங்கை பெண் குறித்து பிபிசி சிங்கள இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
துருக்கியின் அங்காராவில் வசிக்கும் தில்ஹானி சந்திரகுமார் என்ற பெண்ணே இவ்வாறான மனிதாபிமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த பெண் தனது இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தை நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு வழங்கியுள்ளார்.
“இந்த செயலினால் எனக்கும் என் கணவருக்கும் கிடைக்கும் நன்மை, மன மகிழ்ச்சியாகும் இதுதான் நமது மனிதநேயம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான அனர்த்தங்களின் போது தான் உயிரை விட பணம் முக்கியம் இல்லை என்பதை உணர முடிவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவின் வடபகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment