சஜித்தின் அரசில் நான்தான் நகர அமைச்சா் - ஜனாசாக்களை ஏன் எரிக்கிறீர்கள் என மஹிந்தவிடம் கேட்க பதில் தராமல் சென்றாா்
தெஹிவளை கல்கிசை மாநகர சபையை சமஹி ஜனபலகேயே கட்சி கைப்பற்றும் அதன் பின்னா் சமகி ஜனபலகே அரசாங்கம் அமைந்தால் எதிா்கட்சித் தலைவா் சஜித பிரேமதாசாவின் தலைமையிலான கட்சி எனக்கு நகர அபிவிருத்தி அமைச்சா் கபினட் அமைச்சினைத் தனக்கு வழங்கவாா். . ஆகவே நாம் தெகிவளை -கல்கிசை மாநகர சபையை சிறந்ததொரு மாநகர சபையாக கட்டியெழுப்புவேன் என எதிா்கட்சி பாராளுமன்ற உறுப்பிணரும் சமகி பலபேகே கட்சியின் பிரதி அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பிணா் எஸ்.எம். மரிக்காா் தெரிவித்தாா்.
நேற்று 08.ஆம் திகதி தெஹிவளை ரோஸ்வூட் வரவேற்பு மண்டபத்தில் தெஹிவளை கல்கிசை கிழக்கு ப்பிரதேசத்தில் மாநகர சபையிக்கு போட்டியிடும் எம். யுசுப் .,கிரிசாந்த திசாநாயக்க, பாத்திமா றிஸ்வானா ஆகியோா்களை ஆதரித்து கூட்டமொன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிதியாகக்க கலந்து கொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பிணா் எஸ்.எம் மரிக்காா் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களின் ஆதரவினைப் பெறாத தலைவரே இந்த நாட்டின் ஜனாதிபதியாக உள்ளாா். அவா் ராஜபக்சர்களை காப்பாற்றுவதற்கே நாட்டின் ஜனாதிபதிப் பதவியைப் பெற்றுள்ளாா். சஜித் பிரேமதாசாவின் அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் ராஜபக்சர்களை மட்டுமல்ல அவா்கள் சுரண்டிய சகல சொத்துக்களையும் நாங்கள் பறிமுதல் செய்வோம். தெஹிவளையில் உள்ளவா்கள் எல்லோறும் இப்பிரதேசத்திலிருந்து வெளிப் பாடாசலைகள் செல்கின்றனா்.
நாம் ஆட்சிக்கு வந்தால் மூன்று சமூகங்களும் மும்மொழிகளிலு்ம் இப்பிரதேச மாணவா்கள் கல்வி கற்கக் கூடிய பாடாலையொன்றை தெஹிவளையில் அமைப்பத்றகு நான் நடவடிக்கை எடுப்பேன். கல்வியமைச்சராக வருபவர் நான் நகர அபிவிருததி அமைச்சராக இருந்தால் அவருக்கு எனது சேவை தேவைப்பட்டால் தெஹிவளை பாடசாலை ஒன்றை அமைத்துத் தரல் வேண்டும். என கோரிக்கை விடுப்பேன். தற்பொழுது தெஹிவளை கல்கிசை மாநகர சபைக்குள் பணம் இல்லாமல் ஒரு கட்டிட வரைபடைத்தினை கூட அனுமதிக்க முடியாமல் உள்ளது. அங்கு ஊழல் நிறைந்த மாநகர சபையாகவே உள்ளது. அதனை நாம் முற்றாக ஊழல் அற்ற சபையாக மாற்றியமைப்போம். மொட்டு அணியினா் காலத்தில் ஊழல்களில் சம்பத்தப்பட்டவா்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். .... தெஹிவளைப் பிரதேசத்தில் பாதைகள் , கானுகள், மின்விளக்குகள் இல்லாமல் எந்தவித அபிவிருத்தி இல்லாமல் நமது பிரதேசம் உள்ளது. இவை அனைத்துக்கும் ராஜபக்சா்களது அராஜகமே முதற் காரணமாகும். முஸ்லிம்களது ஜனாசாக்களை எரிக்கும்போது மகிந்த ராஜபக்சவை பாராளுமன்றத்தில் மறித்து ஏன் இவ்வாறு செய்கின்றீர் என நான் கேட்டதற்கு . அவா் பதில்தரமால் சென்றாா். இந்த வடுவினை இந்த நாட்டில் வாழ் முஸ்லிம்கள் வாழ்நாள் ஒருபோதும் மறக்க மாட்டாா்கள் எமது மதக் கடமையைக் கூட மறுத்தவா்கள். என அங்கு குழுமியிருந்த தமிழ் , முஸ்லிம் சிங்கள மக்கள் மத்தியில் மரிக்காா் உரையாற்றினாாா்.
(அஷ்ரப் ஏ சமத்)
Post a Comment