Header Ads



பங்களாதேஷில் ஓடிப்பிடித்து விளையாய சிறுவன், மலேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்


பங்களாதேஷில் ஒடிப்பிடித்து விளையாடிய சிறுவன் ஒருவன் கொள்கலன் ஒன்றில் சிக்கிக் கொண்ட நிலையில் ஆறு நாட்களின் பின்னர் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.


சிட்டகோனில் இருந்து புறப்பட்டு மலேசியாவின் மேற்குத் துறைமுகத்தை சென்றடைந்த கப்பலிலேயே 15 வயதான பாஹிம் என்ற அந்த சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பர்னாமா தெரிவித்துள்ளது.


“கொள்கலனுக்குள் சென்ற சிறுவன் அங்கு உறங்கிய நிலையில் இங்கு வந்து சேர்ந்திருக்கிறான்” என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைபுத்தீன் இஸ்மைல் தெரிவித்துள்ளார். 


கொள்கலனுக்குள் ஆறு நாட்களாக உணவு இன்றி உடல் பலவீனமுற்ற நிலையில் இருந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். நண்பர்களுடன் ஓடிப்பிடித்து விளையாடியபோது கொள்கலனுக்கு நுழைந்த நிலையில் அது மூடிக்கொண்டதாக சிறுவன் குறிப்பிட்டுள்ளான். ஆட்கடத்தலுடன் இந்த சம்பவத்திற்குத் தொடர்பு இல்லை என்று மலேசிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். சட்டபூர்வ வழியில் சிறுவனை பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.