Header Ads



எங்கள் ஹெலிகொப்டரை வீழ்த்தும் ஏவுகணைகள் ராஜபக்சக்களிடம் இல்லை , தேர்தல் முடிந்தவுடன் பசில் எங்கு ஓடவுள்ளார் தெரியுமா..?


எங்கள் ஹெலிகொப்டர் கூட்டணியை வீழ்த்துவதற்கான வல்லமை மொட்டுக் கட்சிக்குக் கிடையாது, தேர்தல் முடிந்த கையோடு அமெரிக்காவுக்கு ஓட வேண்டிய நிலை பஸில் ராஜபக்சவுக்கு ஏற்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


விமல் அணியின் ‘ஹெலிகொப்டர்’  ராஜபக்சவின் அரசியல் கோட்டையில் உடைந்து விழும் என 'மொட்டு'க் கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் அவரின் கருத்துக்கு ஊடகங்களிடம் பதிலடி கொடுக்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 'மொட்டு'க் கட்சி படுதோல்வி அடையும். எமது ஹெலிகொப்டரை வீழ்த்துவதற்கான ஏவுகணைகள் தற்போது ராஜபக்சக்களிடம் இல்லை. அவ்வாறு இருந்திருந்தாலும் அவை தற்போது புஷ்வாணங்களாகியிருக்கும்.


'மொட்டு'க் கட்சியைப் பூஜ்ஜிய மட்டத்துக்குக் கொண்டு வந்த ஸ்தாபகர் என்ற நாமத்துடனேயே பஸில் ராஜபக்சவுக்கு அமெரிக்கா செல்ல நேரிடும் என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்திருந்தார்.

1 comment:

  1. வெனெசுவேலா அல்லது ஈக்வடோருக்கு உம்மை நாடு கடத்த வேண்டும். உம்மைப் போன்ற படுகெட்ட ஈனத்தனமாக இனத் துவேசிகள் இந்த நாட்டிலிருந்து உடனடியாக த் துரட்சி பண்ணப்பட வேண்டும். ராஜபக்சக்கள் அழிந்து நீர் எஞ்சியிருப்பதை இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் சகிக்கமாட்டார்கள் என்பதை அடுத்து வரும் தேர்தல் நிச்சியமாக பாடம் கற்றுக் கொடுக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.