Header Ads



மக்கள் இறையாண்மைக்கு எதிராக, அரசியல் தீர்மானங்களை எடுப்பது சர்வதிகாரமாகும்


தற்போது இலங்கையில் பாரிய ஜனநாயகப் பிரச்சினை எழுந்துள்ளதாகவும், இது போன்ற கடுமையான ஜனநாயகத்தை மீறும் செயல்கள் வேறு எந்நாட்டிலும் இடம் பெறுவதாக இல்லை எனவும் நேற்று (19) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


நமக்குக் காட்டிய லிபரல்வாத, ஜனநாயகவாத தலைவர்கள் இப்போது எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று சிந்தித்து பார்க்குமாறும், கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என அமைச்சரவை தீர்மானம் எடுத்து, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் எனவும், வேறு எந்நாட்டில் இப்படியெல்லாம் நடக்கிறது என தெரிவித்த அவர், பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பினால், அவ்வாறானதொரு அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளவில்லலை என பிரதமர் கூறுகிறார்.


இது ஜனநாயகத்திற்கு ஏற்படுத்திய பாரிய தாக்குதலாகும் என அவர் தெரிவித்தார்.


மக்கள் இறையாண்மைக்கு எதிராக அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுப்பது சர்வதிகார போக்காகும் எனவும், மக்கள் அபிப்பிராயம் மற்றும் மக்கள் ஆணையை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.