தேர்தல் இல்லாவிட்டாலும், எனது சேவைகள் தொடரும் - முஜீபுர் ரஹ்மான்
- A.A. Mohamed Anzir -
உள்ளுராட்சித் சபைத் தேர்தல் நடத்தப்படுமா என்பதில் சந்தேகங்கள் மேலோங்கியுள்ள நிலையில், மக்களுக்கான சேவைகள் தொடரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளருமாகிய முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்தது குறித்து, நமது சமூகத்தில் உள்ள சிலர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அவர்கள் என்மீது கொண்டுள்ள நன்மதிப்பு மற்றும் நம்பிக்கைக்கு எனது நன்றிகள்.
பாராளுமன்றத்தில் நான் அநேக அமர்வுகளில் பங்கேற்று, முழு நாட்டுக்காகவும், முஸ்லிம் சமூகத்திற்காகவும், கொழும்பு மாநகர மக்களுக்காகவும் குரல் எழுப்பியுள்ளேன்.
கொழும்பு மேயராக வருவதன் மூலம், அம்மக்களுக்கு மேலும் உச்சக்கட்ட சேவைகளை வழங்க முடியுமென்று நம்பினேன். எனது நம்பிக்கையின் காரணமாக பாராளுமன்ற பதவியை ராஜினாமா செய்தேன். தற்போது உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெறுவதில் தாமதம் நிலவுகிறது.
தேர்தலில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் ரணில், தேர்தலை ஒத்திப் போடுவதில் வெற்றி பெற்றுள்ளார். எனினும் அவர் நாட்டை முன்னேற்றுவதிலோ அல்லது மக்களை வெற்றெடுப்பதிலோ தோல்வியடைந்து விட்டார் எனவும் முஜீபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
Post a Comment