Header Ads



தொழிலதிபர் சடலமாக மீட்பு - தலங்கமவில் சம்பவம்


கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான வர்த்தகர் ஒருவர் தலங்கம பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் நீச்சல் தடாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


அவரது சகோதரர் ரொஷான் வன்னிநாயக்க வீடு திரும்பவில்லை என வர்த்தகரின் சகோதரி வெல்லம்பிட்டிய பொலிஸில் ஜனவரி 30 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அதன்படி, தலங்கம பெலவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அவரது 3 மாடி சொகுசு கட்டிடத்தில் இன்று வர்த்தகரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.


மரணத்திற்கான காரணத்தை கண்டறிய தலங்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.