Header Ads



ஜனாதிபதிக்கு அருகில் மீன் பிடித்தவர் கைது


- ஷேன் செனவிரத்ன -


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மினிபே குளக்கட்டின் புனரமைப்பு நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு அருகில் ஓர் இடத்தில் வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர், ஹசலக்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


ரட்டம்பே மாணவர் படையணியின் முகாமில் நடைபெற்ற வைபவத்தில் நேற்று (19) கலந்துகொண்டதன் பின்னர், குளக்கட்டின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.


கைது செய்யப்பட்ட நபர், உடதும்பர வனஜீவராசிகள் காரியாலயத்தால் நிர்வகிக்கப்படும் யானை வே​லிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.