Header Ads



லண்டனில் சந்திரிக்காவை விருந்தினராக அழைத்தமைக்கு எதிர்ப்பு


லண்டன் ஸ்கூல் ஒப் எகனாமிக்ஸின் தெற்காசிய மையம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ் மாணவர் அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


இலங்கையின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் இந்த நிகழ்வானது, “சிலோன் டு ஸ்ரீலங்கா: தேசத்தில் ஒரு பயணம்” என்ற தலைப்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த அழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் இளையோர் அமைப்பு பல்வேறு மாணவர் அமைப்புகளின் கையெழுத்தோடு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

1995 கடற்படைத் தேவாலய குண்டுவெடிப்பு, 1995 நாகர்கோவில் பள்ளி படுகொலை, 1996 குமாரபுரம் படுகொலை, 1998 தம்பலகாமம் படுகொலைகள் மற்றும் 1999 புதுக்குடியிடுப் படுகொலை உட்பட தமிழ் மக்களுக்கு எதிரான பல அட்டூழியங்களை மேற்கோள் காட்டியுள்ள மாணவர் அமைப்புகள்

இலங்கையின் நெருக்கடி பற்றி பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை அழைத்திருப்பதை கடுமையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளது.


ஆதாரம் தமிழ் கார்டியன்

No comments

Powered by Blogger.