ரணில் ஆம் சொன்னால், தேர்தலுக்கு பணம் வழங்குவோம் - நிதியமைச்சு தெரிவிப்பு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நிதியமைச்சின் செயலாளர் இது தொடர்பில் அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே பணம் ஒதுக்கப்பட வேண்டுமெனவும், அந்த சுற்றறிக்கையின் கீழ் தேர்தல் நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவையாக குறிப்பிடப்படவில்லை எனவும் நிதியமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
அத்தியாவசிய சேவைகள் பிரிவில் இல்லாத நிறுவனங்களுக்கு பணத்தை வழங்குவதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அங்கீகாரம் பெறப்பட வேண்டுமென நிதி அமைச்சின் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியதாக அவர் குறிப்பிட்டார்.
Post a Comment