நாளை இடையூறு விளைவிக்கும் எந்தப் போராட்டமும் கூடாது, காலி முகத்திடக்குள் நுழைவதைத் தடுத்து நீதிமன்றம் உத்தரவு
75 ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (04) கொழும்பில் நடத்தப்படவிருந்த போராட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 75வது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நாளை எந்தப் போராட்டமும் நடத்தப்படக் கூடாது எனவும், காலி முகத்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுத்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
Post a Comment