பள்ளிவாசலானது மனதிற்கு அமைதி தருகிறது - பிரதேச பிரதேச செயலாளர்
அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசலினை பார்வையிட அகில இலங்கை சமாதான பேரவை ரக்குவான கிளையினர் பொல்கஹவெல பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தலைமையில் விஜயம் மேற்கொண்டனர். இந்த குழுவில் பௌத்த விகாராதிபதிகள், இந்து மதகுருமார்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், உலமாக்கள், அரச அதிகாரிகள் என பலரும் காணப்பட்டனர்.
அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள சமாதான பேரவை கிளைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த குறித்த குழுவினர் திடீரென்று அக்கறைப்பற்று பெரிய பள்ளிவாயலை.தரிசிக்க வேண்டுமெனவும் பார்வையிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களுக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் அனுமதி.வழங்கப்பட்டது. அதற்கிணங்க அக்கறைப்பற்று பெரிய பள்ளிவாயலில் நடைபெற்ற மார்க்க பிரசங்கத்தை செவியேற்றதுடன் பள்ளிவாயலையும் பார்வையிட்டனர்.
இவ்விஜயத்தின் போது கருத்து வெளியிட்ட பொல்கஹவெல பிரதேச பிரதேச செயலாளர், இப் பள்ளிவாசலானது மனதிற்கு அமைதி தருவதாக காணப்படுகிறது எனவும் கலை உணர்வுகளுடனான ரம்மியமான சூழல் பள்ளியில்.உள்ளதாகவும் தாங்கள் நினைத்து வந்ததற்கு மாற்றமாக இப்பள்ளிவாயலில் தங்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்து சிறப்பான ஒழுங்குகளை செய்து தந்த குறித்த பள்ளிசாலின் தலைவர் எஸ்.எம்.சபீஸ் உட்பட நிர்வாகத்தினருக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் தங்களது பிரதேச மக்களிடம் இவ்விஜயத்தின் போது நடைபெற்ற நல்லிணக்க விடயங்களைப்பற்றி.எடுத்தியம்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.
Post a Comment