நில நடுக்கத்தினால் காணாமல் போன கரப்பந்தாட்ட அணி
துருக்கிக் கட்டுப்பாட்டு சைப்ரஸ் பகுதியில் இருந்து தெற்கு துருக்கிக்கு பயணித்த உயர் பாடசாலை கரப்பந்தாட்ட அணி ஒன்றைச் சேர்ந்த 30 பேரும் பூகம்பத்தைத் தொடர்ந்து காணாமல் போன நிலையில் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை 7.8 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்படும்போது இவர்கள் அதியமன் நகரில் இருக்கும் இசியாஸ் ஹோட்டலில் தங்கி இருந்துள்ளனர். இந்த நகரில் பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமான நிலையில் பலரும் அதில் சிக்கியுள்ளனர்.
பூகம்பத்தின் பின்னர் இவர்களிடம் இருந்து எந்தத் தொடர்பும் கிடைக்கவில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இரு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.
Post a Comment