காரை ஏற்றி, நாய் குட்டிகளை கொன்றவளுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு
நாய் குட்டிகள் இரண்டின் மீது காரொன்றை ஏற்றிய குற்றச்சாட்டின் கீழ் 27 வயதான பெண் ஓட்டுனர் மதுரட்ட பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார். குறித்த சம்பவம் ரிகிலகஸ்கட வீதி கதுரகடே பட்டியப்பெலெல்ல பகுதியில், வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் கடந்த 17 ஆம் திகதி பதிவாகியுள்ளது.
வாகனமேற்றி நாய்க்குட்டிகள் கொல்லப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து மதுரட்ட பொலிஸ்க்கு கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
அந்தப் பெண், பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் அளிக்க வந்த சமயத்தில், மிருகவதைத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அந்தப் பெண், வலப்பன நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டபோது, குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதனையடுத்து ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் அப்பெண் விடுவிக்கப்பட்டார்.
Post a Comment