சமூக வலைத்தள செயற்பாட்டாளர் கைது
- டி.கே.ஜி.கபில -
யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளர் நிஷாந்த தர்ஷன ஹதுங்கொட துபாயிலிருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கணினி குற்றப்பிரிவின் விசேட குழுவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இவர் துபாயிலிருந்து நேற்று இரவு (5) 09.55 மணிக்கு Emirates விமானமான EK-648 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கடந்த வருடம் மே மாதம் 9ஆம் திகதி அலரிமாளிகையின் முன்பாக இருந்து பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் நேரலையாக நிகழ்ச்சியை ஒளிபரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இந்த கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திரு.நிஹால் தல்துவ தெரிவித்தார். அறிவித்தார்.
இந்த நிலையில், இரண்டு தடவைகள் கொழும்பு கணினி குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் தர்ஷன ஹதுங்கொட டுபாய் சென்று திரும்பிய நிலையிலேயே நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Post a Comment