Header Ads



ஜனாதிபதி மக்களுக்கு நரகத்தைக் காட்டி, ராஜபக்சர்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார் - சஜித்


நாட்டை அழித்த ராஜபக்சர்கள் மக்களின் வாழ்வை முற்றிலுமாக சீரழித்து விட்டனர் எனவும்,நன்றாக வாழ்ந்த மக்களின் அன்றாட வருமானம் சரிந்தாலும் அந்நிலையை உருவாக்கிய ராஜபக்சர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பாதுகாத்து வருவதாகவும், யானை-காகம்-மொட்டு பொதுக் கூட்டு மக்கள் வாழ்வை அழித்துவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


மின் கட்டணம்,எரிபொருள் விலை,எரிவாயு விலை,வரி அதிகரிப்பு போன்றவற்றை அதிகரிப்பதன் மூலம் வியாபாரம் செய்யாதீர்கள்,தொழிலை நிறுத்துங்கள், தொழிற்சாலைகளை மூடுங்கள்,வேலை வழங்காதீர்கள் என்ற செய்தியை அரசாங்கம் விடுப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் சுருக்கி அதலபாதாளத்தில் தள்ளவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


நாட்டு மக்களின் பணப்பையை காலி செய்து மக்களின் கனவுகளை அழித்த இந்த மக்கள் ஆணை இல்லாத அரசாங்கம்,ராஜபக்சர்களின்  சொர்க்கமாக மாறியுள்ளதாகவும், ராஜபக்சர்களின் திருட்டுக்களைப் பாதுகாக்கும் கைபொம்பையாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அடுத்த தேர்தல் வெற்றியுடன் ஐக்கிய மக்கள் சக்தி செயற்படத் தொடங்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


வீழ்ந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டுமானால்,ஒரு பாரிய தேசிய புரட்சி எழ வேண்டும் எனவும்,அது ஒரு அரசியல் புரட்சி மட்டுமல்லாது,அபிவிருத்திப் புரட்சியும்,புதிய சிந்தனா ரீதியான புரட்சியுமாகும் எனவும்,அதற்கு இந்நாட்டில் காலாவதியான கல்வி முறை மாற்றப்பட்டு சர்வதேச சந்தைக்கு ஏற்ற நவீன தொழில்நுட்பத்துடன்,நவீன திறன்களை உருவாக்கும் ஆங்கில மொழியறிவுக்கு முன்னுரிமை வழங்கும் கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


இதையெல்லாம் செய்யும் போது மக்கள் மீது வரிச் சுமை சுமத்தக்கூடாது எனவும், மக்களின் கைகளில் பணம் புழங்கும் முறை உருவாக்கப்பட்டு பொருளாதார அபிவிருத்தியை ஈட்ட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


பதுளையில் நேற்று (8) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.