Header Ads



ஷாஹித் அப்ரிடியின் மகளை மணந்தார் ஷஹீன் ஷா அப்ரிடி


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி (Shaheen Shah Afridi), முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஷாஹித் அப்ரிடியின் (Shahid Afridi) மகளை மணந்துள்ளார். 


ஷாஹீன் ஷா அப்ரிடிக்கும் ஷாஹித் அப்ரிடியின் மகள் அன்ஷாவிற்கும் இடையே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. 


இந்நிலையில், ஷஹீன் ஷா - அன்ஷா திருமணம் கராச்சியில் நேற்று (03) நடைபெற்றுள்ளது.


பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம், சர்பிராஸ் அகமட், நசீம் ஷா, சதாப்கான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், பிரபல ஸ்குவாஸ் வீரர் ஜஹாங்கீர்கான் உள்பட பலர் திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.


ஷஹீன் ஷா அப்ரிடி 25 டெஸ்டில் விளையாடி 99 விக்கெட்களும், 32 ஒருநாள் போட்டியில் 62 விக்கெட்களும், 47  T20 ஓவர் ஆட்டத்தில் 58 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார். 


பாகிஸ்தான் அணிக்காக 3 வடிவிலான போட்டிகளிலும் அவர் விளையாடி வருகிறார்.




No comments

Powered by Blogger.