Header Ads



மாதவிடாய் வலிக்கு மருத்துவ விடுமுறை - சட்டம் நிறைவேறியது


ஸ்பெயினில் கடுமையான மாதவிடாய் வலியால் அவதியுறும் பெண்களுக்கு மருத்துவ விடுமுறையை அனுமதிக்கும் சட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பாராளுமன்றத்தில் புதிய சட்டத்துக்கு ஆதரவாக 185 பேர் வாக்களித்ததோடு எதிராக 154 வாக்குகள் பதிவாயின. உலகில் சில நாடுகளே மாதவிடாய்க்கு மருத்துவ விடுப்பை வழங்குகின்றன. ஜப்பான், இந்தோனேசியா, ஸாம்பியா ஆகியவை அதில் அடங்கும்.


மாதவிடாய் காரணமாக வலியால் அவதியுறும் பெண்கள் தேவையான மருத்துவ விடுப்பை எடுத்துக்கொண்டு ஓய்வெடுக்கப் புதிய சட்டம் அனுமதி தருகிறது.


மருத்துவர்கள் எவ்வளவு நாட்கள் அத்தகையோருக்கு மருத்துவ விடுப்பு வழங்கலாம் என்பதைப் புதிய சட்டம் இன்னும் நிர்ணயிக்கவில்லை.


மாதவிடாய் இருக்கும் பெண்களில் மூன்றில் ஒரு பங்கினருக்குப் பெரிய அளவில் வலி ஏற்படுகிறது என்று ஸ்பானிஷ் பெண்ணோயியல் மற்றும் மகப்பேறியல் சங்கம் என்ற ஸ்பானிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. அடேயப்பா, இது மட்டும்தான் இலங்கையில் குறைவாக இருந்தது. இலங்கை அரச சேவையில் செல்வாக்குச் செலுத்துவதும், பெரும்பான்மையும் பெண்ணினத்துக்குரியது. இனி ஸ்பெயினில் சட்டம் அமலுக்கு வரமுன்பு இலங்கையில் சட்டம் நிறைவேறி ஒருவாரம் விடுமுறையையும் பெற்றுக் கொள்ள பெண்கள் அரச காரியாலங்களில் இன்றிலிருந்தே ஆயத்தமாகுவார்கள். ஆகக்கூடியது ஓரிரண்டு மாதங்கள் தான் தேவை. அத்துடன் சட்டம் அமலாகும். இனி எடுக்கும் கசுவல் உற்பட மாதம் ஒரு ஏழுநாட்கள் பெண்களுக்கு விடுமுறை. சிலவேளை அது இன்னும் தொடரவும் வாய்ப்புண்டு. அதற்கு மருத்துவ சான்றிதழ் கொடுக்க ஏற்கனவே வைத்தியர்களும் தயாராக இருப்பார்கள். அரச சேவையின் முன்னேற்றத்துடன் நாடும் இனி முன்னேறும்.

    ReplyDelete

Powered by Blogger.