இலங்கை தொழிலதிபர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு
இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்க இந்தோனேசியாவில் இன்று (05.02.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், கோடீஸ்வர தொழிலதிபருமான ஒனேஷ் சுபசிங்க (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜகார்த்தாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜகார்த்தா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Tw
Post a Comment