முஜிபுர் ரஹ்மானின் மனுவை விசாரிக்க தீர்மானம்
பிரியந்த ஜயவர்தன, மூர்து பெர்னாண்டோ, அசல வெங்கப்புலி ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று(16) பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சர்வஜன வாக்குரிமைக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முயற்சி என்பதனால் இந்த மனு மீதான விசாரணையை விரைவில் மேற்கொள்வதற்கான திகதியை அறிவிக்குமாறு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உப்புல் ஜயசூரிய, நீதியரசர்கள் குழாத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அமைச்சரவை செயலாளரினால் விடுக்கப்பட்ட அறிவிப்பிற்கு அமைய வௌியிடப்பட்ட குறித்த சுற்றுநிருபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் ஒரு சில மணித்தியாலங்களில் வாபஸ் பெறப்பட்டதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி நெரில் புள்ளே நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் கவலை தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
Post a Comment