பிரதான நடிகராக ஜனாதிபதி ரணில் - விபரங்களை வெளிப்படுத்த அநுரகுமார கோரிக்கை
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையினை முன்வைத்த அனைவரின் விபரங்களையும் வெளிப்படுத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இரத்தினபுரி நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்...
அண்மையில் நாடாளுமன்றில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. அதில் பிரதான நடிகர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆவார். தேர்தலை ஒத்திவைக்க, தேர்தல் ஒன்று நடத்தப்படவுள்ளதா என கேட்கின்றார். எதிர்கட்சியிலும், ஆளும் கட்சியிலும் தொடர்ச்சியாக தேர்தலை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டனர். தேர்தலை ஒத்திவைக்குமாறு கூறியவர்களின் விபரங்களை ஜனாதிபதி தெரிவிக்க வேண்டும். தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் நபர் ரணில் விக்ரமசிங்க இல்லை. ரணில் விக்ரமசிங்க என்பவர், இலங்கை அரசியலமைப்பிற்குள் அங்கம் பெற்றவரே தவிர அரசியலமைப்பிற்கு அப்பால் அங்கம் வகிப்பவர் அல்ல.
Post a Comment