எங்கள் பயணம் தொடர்கிறது
நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவிடம் இருந்து 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை அரசியல் சுதந்திரத்தைப் பெற்று, இன்று 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை இலங்கை கொண்டாடியது.
இதற்கமைய சுதந்திர தினம் குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்ககாரா தனது டுவிட்டரில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், 'இது ஒரு குறிப்பிடத்தக்க நாள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும், அதன் உண்மையான சாராம்சத்தையும், பொருளையும் கண்டறிவதற்கான எங்கள் பயணம் தொடர்கிறது' என பதிவிட்டுள்ளார். TW
Post a Comment