நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பை விடுத்துள்ள மத்திய வங்கி
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டு மக்கள் தங்களுக்கு வரும் மோசடியான குறுஞ்செய்தி தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி அட்டைத் தகவல்களின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மக்கள் தங்கள் பயனர் username, password, PIN, OTP மற்றும் வங்கி கணக்கு தொடர்பான மேலதிக தகவல்களை வேறு எந்த தரப்பினருடனும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்குமாறு மத்திய வங்கி மக்களுக்கு அறிவித்துள்ளது.
Post a Comment