முஸ்லிம்கள் மீது, வியாழேந்திரனுக்கு என்ன பிரச்சினை..?
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் காத்தான்குடி முஸ்லிம் மக்களுக்கு எதிராக தெரிவித்த கருத்தை காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கண்டித்துள்ளது.
இது தொடர்பாக சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நமது நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் பல்வேறு வகையான துன்பங்களையும் இன்னல்களையும் அனுபவித்தமையை இலங்கை வாழ் மக்கள் அனைவரும் அறிவார்கள்.
யுத்தத்தினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களது இழப்புகளை அறிந்தும் அதனை வேண்டுமென்றே மறைத்தும் இனவாத குழுக்களின் பின்னால் மறைந்து கொண்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார்.
அநியாயம் இழைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பின்னால் இருக்கின்ற வேதனைகளையும் வலிகளையும் புரிந்து கொள்கின்ற மனோநிலையில் வியாழேந்திரன் இல்லை என்பதும் இன்னும் ஒரு மன வேதனையான விடயமாகும். வளமான நமது தேசம் இவரைப் போன்ற விஷமப் பிரச்சாரத்தினால்தான் சீரழிந்து போயிருக்கிறது என்பதே உண்மையாகும்.
கடந்த வருடங்களில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாரியளவில் காணிப் பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்றுக் கோண்டிருக்கின்ற அதே நேரம் அவைகளைக் தீர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டும் சில அரச அதிகாரிகளின் கரிசனையின்மையினால் அவை இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.
உதாரணமாக மண்முனைப் பற்று பிரதேசத்தில் முஸ்லிம்கள் பரம்பரையாக வாழ்ந்த அவர்களுக்கு சொந்தமான 48 ஏக்கர் காணி இதுவரையில் அவர்களுக்கு விடுவித்துக் கொடுக்கப் படவில்லை என்பதையும் வியாழேந்திரன் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வளவு காலமும் இனவாத அரசுகளோடு ஒட்டி உறவாடி இருந்துவிட்டு இப்போது மக்கள் அவ் இனவாத ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப இருக்கின்ற நிலையில் தனக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் அதிகாரம் ஒன்று இல்லாமல் போகும் என்ற அச்சம் அவருக்கு பீடித்திருக்கிறது. இதுபோன்ற இனங்களுக்கிடையில் குரோதத்தை தோற்றுவிக்கின்ற கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிப்பதை வியாழேந்திரன் முற்றாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
இரண்டாவதாக, ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்து யார் செயற்பட்டார்கள் என்பது மிகத் தெளிவாக தற்போது வெளிவந்திருக்கின்ற நிலையில் வெறுமனே சஹ்ரானோடு தொடர்பில்லாத ஒரு பள்ளிவாசலை அரசாங்கம் தனது தேவைக்காக பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்ற நிலையில் அதனை காத்தான்குடி சமூகம் மீண்டும் எங்களுக்குத் தர வேண்டும் என்று கேட்பதில் வியாழேந்திரனுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.- Vidivelli
ஓட்டு கிடைக்க தன்னுடைய மனைவியையே கூட்டி கொடுத்த தமிழ் இன வெறியன் இவன். கடந்த முறை ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றியை பரித்தே பாராளுமன்றம் சென்றான் இம்முறை வெற்றியேன்பது நடக்காது என்று தெரிந்தே தாயை புணரும் காரியங்களுக்கு நிகரானதை செய்து வெல்ல துடிக்கின்றான்
ReplyDelete