Header Ads



இலங்கையின் பிரபல தொழிலதிபர், கமில் ஹுசைன் கென்யாவில் காலமானார்


பிரபல தொழிலதிபர் கமில் ஹுசைன் நேற்று ( 5 ) கென்யாவில் காலமானார். கமில் ஹுசைன் கொழும்பு 04 இல் அமைந்துள்ள Synergy Ventures Pvt . லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பதவி வகித்துவந்தார் . 


அவர் நியூமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கென்யாவில் காலமானார் . 


கமிலின் மறைவு குறித்து தனது இரங்கல் அறிக்கையை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி , கமில் ஹுசைன் உண்மையான நண்பர் , தேசபக்தர் மற்றும் சமூக ஆர்வலர் என்று கூறினார் . அவரது மரணம் நெஞ்சை உலுக்கும் செய்தி என்று வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.