“தேர்தல் வேண்டாம்” என்ற மனு, இன்று ஒத்திவைப்பு
ஓய்வூ பெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு மனுவை ஆராய்வதற்கு தேவையில்லை என அவரது சட்டத்தரணி உயர்நீதிமன்றத்திற்கு இன்று -20- அறிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஒத்தி வைக்குமாறு உத்தரவொன்று பிறக்க கோரி, ஓய்வூ பெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இந்த மனுவை, 23ம் திகதிக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஆராய்வதற்கு தேவையில்லை என அவரது சட்டத்தரணி உயர்நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 23ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
Post a Comment