சாதனை படைத்தார் சவேந்திர சில்வா
75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , முப்படைகளின் தலைமை தளபதி என்ற வகையில் , முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு களங்கமற்ற சேவையை அங்கீகரிக்கும் மதிப்புமிக்க விஷிஷ்ட சேவா விபூஷணயா ( விஎஸ்வி ) விருதை வழங்கினார் .
கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த விருதுகள் வழங்கப்பட்டன .
இந்த நிகழ்வின் போது , இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுதந்திர தினப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார் . விஷிஷ்ட சேவா விபூஷணயா பதக்கம் ஒரு சிறப்பு விருது மற்றும் லெப்டினன்ட் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது .
கேர்னல் மற்றும் அதற்கு மேல் இராணுவத்தில் உள்ளவர்கள் மற்றும் கடற்படை மற்றும் விமானப் படையில் ஒரே மாதிரியான பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் , குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தொடர்ச்சியான சேவை மற்றும் கறைபடாத சேவைப் பதிவைக் கொண்டவர்கள் , இந்த விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள் .
இந்தநிலையில் இன்று பெற்றுக்கொண்ட பதக்கத்துடன் ஜெனரல் சில்வா தற்போது மொத்தம் 20 வௌ வேறு மதிப்புமிக்க பதக்கங்களை வைத்துள்ளார் . 2015 இலும் அவர் வி.எஸ்.வி பதக்கத்தை பெற்றுக்கொண்டார்
காக்கைத்தந்திரத்தை மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்தி வெற்றியடைந்த செயல்திட்டத்தின் மைல்கல் தான் இந்தப் பதக்கம். இந்த சூழ்நிலையில் அவரையும் அதனை வழங்கியவரையும் பாராட்டுவதைத் தவிர பொதுமக்களுக்கு வேறு பதிலீடு கிடையாது.
ReplyDelete