ஐந்து காசுகளுக்கு கூட பொருட்படுத்த மாட்டேன்
சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்தவர்களால் தமக்கு எதிராக சதி முன்னெடுக்கப்படுவதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த சதிகளை ஐந்து காசுகளுக்கு கூட பொருட்படுத்த மாட்டேன் என்று கூறும் அவர், தன்னை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இவர்கள் கட்சிக்கு முன்மொழிந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த குழு ஏற்கனவே ஒழுக்காற்று குற்றச்சாட்டின் பேரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கினால் தான் அவர்கள் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment