காய், கறிகளின் விலை வேகமாக குறைந்தது (விபரம் இணைப்பு)
சந்தையில் காய்கறிகளின் விலை வேகமாகக் குறைந்துள்ளது.
கரட், கோவா, பூசணி, உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, கொழும்பு மெனிங் சந்தையில் ஒரு கிலோ கரட் 100 ரூபாவுக்கும், கோவா கிலோ 40 ரூபாவுக்கும், போஞ்சி கிலோ 280 ரூபாவுக்கும், தக்காளி கிலோ 140 ரூபாவுக்கும், கத்தரிக்காய் கிலோ 150க்கும் ஒரு கிலோ தேசிக்காய் 110 ரூபாவுக்கும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விலைகளுடன் ஒப்பிடுகையில், பொதுச் சந்தையிலும் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
Post a Comment