ஜனாதிபதியாக ரணிலை நியமித்தது குற்றம் - எதிர்க்கட்சித் தலைவர்
சிலாபத்தில் நேற்று (11) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கோடிக்கணக்கான தேவையற்ற செலவுகளைச் செய்து சுதந்திரத்தை கொண்டாடி இருக்க வேண்டியதேவையில்லை எனவும்,செலவு செய்யப்பட வேண்டிய பல அத்தியவசிய தேவைப்பாடுகள் உள்ளனஎனவும்,சுதந்திர தினத்தன்று நடமாடும் கழிவறைக்கு 142 இலட்சம் ஒதுக்குவதற்குப் பதிலாக அந்த பணத்தைஏழை மக்களுக்கு சலுகை வழங்க,மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் எரிபொருள் மற்றும் உர மானியம்வழங்குவதற்கு ஜனாதிபதியும் அமைச்சர்களும் நினைக்கவில்லையா?,
மனசாட்சி முன்வரவில்லையா? என தாம் வினவுவதாகவும்,மக்களுக்கு எண்ணற்ற பிரச்சினைகள் இருக்கும் போதும், தங்கள் இயலாமையை மறைத்து,வெற்று சுதந்திரத்தை கொண்டாடி ஏராளமான பணத்தைநாசமாக்கியதாவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் மக்கள் போராட்டத்தினால் நிதியமைச்சர்,பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் நாட்டை விட்டேதுரத்தியடிக்கப்பட்ட போதிலும் மொட்டுவின் 134 பேர் தந்திரமாக ராஜபக்சவுக்கு விசுவாசமான ஒருவரைமெய்ப்பாதுகாவலராக ஜனாதிபதியாக நியமித்துள்ளனர் எனவும், ராஜபக்சவுக்கு ஆதரவான அரசாங்கத்தைஉருவாக்க மக்கள் வீதியில் இறங்கவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை அழித்துநாட்டை வங்குரோத்தியமாக்கியது ராஜபக்சர்களே என்பதை மக்கள் இன்றும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர்தெரிவித்தார்.
ராஜபக்சவை வெற்றி பெறச் செய்ய தாம் வீடு வீடாகச் செல்லவில்லை எனவும்,
சுவரொட்டிகளை ஒட்டவில்லை எனவும், கூட்டங்களை நடத்தவில்லை எனவும், ஆனால் 2005 ஆம் ஆண்டு ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து அர்ப்பணிப்புகளையும் சிவப்புப் போர்வை போத்திய யானை சகோதரர்களே செய்ததாகவும், அவர்கள் ஆட்சிக்கு கொண்டு வந்த குடும்பத்தால் தான்நாட்டுக்கு இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான திருடர் குடும்பத்திற்குநெருக்கமாக செயற்பட்ட சிவப்பு போர்வை போத்திய சகோதரர்கள் திருடர்களைப் பிடிப்பதாகக் கூறுவது நகைப்புக்குரியது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
கொலை,வன்முறை மற்றும் வீடுக்குத் தீ வைத்தல் என்பவற்றிற்கு தாம் எப்போதும் எதிரானவன் எனவும்,அகிம்சைஅரசியலில் ஈடுபட்டு வரும் தாம்,அரச சொத்துக்களை எரிக்காது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜனநாயகஇளைஞர்களுடன் இணைந்து ராஜபக்சக்களால் நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சகல பணத்தையும்மீட்பதற்காக செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
Post a Comment