Header Ads



சோகத்தை ஏற்படுத்தியுள்ள சிறுமியின் மரணம்


மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


யாழ். புத்துாா் கிழக்கு - ஊறணி பகுதியைச் சோ்ந்த அஜிந்தன் லக்ஸ்மிதா என்ற 4 வயது சிறுமியே நேற்றைய தினம் (26.02.2023) இவ்வாறு மரணமடைந்துள்ளார்.


கடந்த சிவராத்திாி தினத்தன்று திடீரென வாந்தி எடுத்துச் சுகயீனமடைந்த நிலையில், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிாிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், நேற்றைய தினம் குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

No comments

Powered by Blogger.