Header Ads



அடுத்த சுதந்திரத் தினத்தை கொண்டாட ரணில் - ராஜபக்ஷக்கள் வெளியில் இருப்பார்களா...?


தங்களது இறுதி சுதந்திரத் தினத்தையே ரணில் - ராஜபக்ஷ கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, அடுத்த சுதந்திரத் தினத்துக்கு ரணில் - ராஜபக்ஷ சிறையில் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார். 


நாட்டில் பணமில்லை எனக்கூறி 75ஆவது வருட சுதந்திரத் தினத்தை அரசாங்கம் கொண்டாடியுள்ளது. ரணில் - ராஜபக்ஷக்கள் தங்களது இறுதி சுதந்திரத் தினத்தைக் கொண்டாடியுள்ளனர். அடுத்த சுதந்திரத் தினத்தை கொண்டாட ரணில் - ராஜபக்ஷக்கள் வெளியில் இருப்பார்களா? எனவும் கேள்வி எழுப்பினார். 


பிரித்தானியர்கள் நாட்டை விட்டுச் சென்று 75 வருடங்களாகிறது. ஆனால், நாட்டு மக்கள் தங்களது சுதந்திரத் தினத்தை மார்ச் 09ஆம் திகதி கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளனர் எனவும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.