யுக்ரேன் போர்: "ஓராண்டு நிறைவு" - எச்சரிக்கும் உளவு அமைப்பு
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஓராண்டு பிப்ரவரி 24ஆம்தேதி நிறைவடையவுள்ளது. அன்றைய தினம் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களை எதிர்பார்க்கலாம் என்று யுக்ரேன் உளவு அமைப்பு எச்சரித்துள்ளது.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து, விரைவில் அமைதிக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை, உலகின் கூட்டு நிலைக்கு இழைக்கப்பட்ட "அவமானம்" என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஷ் தெரிவித்துள்ளார்.
விளாதிமிர் புதினின் "அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான மறைமுக அச்சுறுத்தல்களையும்" குட்டெரெஷ் கண்டித்தார்.
ஷ்ய தரப்பில் இருந்து ஏவுகணை தாக்குதல்களை எதிர்பார்க்கலாம் என்று யுக்ரேனிய உளவு அமைப்பு எச்சரித்திருக்கிறது.
Post a Comment