மைத்திரிபால உள்ளிட்ட ஈஸ்டர் தாக்குதல், குற்றவாளிகளை கொலை செய்ய வேண்டும்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஈஸ்டர் குண்டு தாக்குதல் குற்றவாளிகளைத் தூக்கில் தொங்கவிட்டுக் கொலை செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தண்டனை போதாது. இதைவிடப் பெரிதாக தண்டனை வழங்கி இருக்க வேண்டும்.
அப்பாவி மக்கள் கொல்லப்படும் வரை பார்த்துக்கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குற்றவாளிகளைத் தூக்கில் தொங்கவிட்டுக் கொலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment