Header Ads



சலுகைகளை அனுபவிக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்


இலங்கையில் பொருளாதாரம் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலையில், அனைத்து துறைகளிலும் நிதி ஒதுக்கீடுகளில் குறைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


எனினும் 2023ஆம் ஆண்டில் முன்னைய ஜனாதிபதிகளுக்காக மில்லியன் கணக்கான நிதிகள் தொடர்ந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய 4 ஜனாதிபதிகளுக்கும், மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கும் இந்த ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


2022ஆம் ஆண்டு பொருளாதாரப் பேரழிவையடுத்து திரைசேரி, 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை தன்னால் இயன்ற அனைத்துப் பகுதிகளிலும் குறைத்து வருகிறது.


எனினும் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, 2022ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கவிற்கு ஒதுக்கப்பட்ட சுமார் 14மில்லியன் ரூபாவும், மகிந்த ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 22 மில்லியன் ரூபாவும் மாற்றமின்றி ஒதுக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் மகிந்த ராஜபக்சவின் விஜேராம வீதி வாசஸ்தலம், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 800 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.


மைத்ரிபால சிறிசேனவுக்கு 2022ஆம் ஆண்டு போன்றே சுமார் 22 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கோட்டாபய ராஜபக்சவுக்கும் குறைந்தது 21 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது நிலையில் ஹேமா பிரேமதாசவுக்கும் குறைந்தது 7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக செய்தித்தாளொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.